Viswasam Movie Review

குழந்தைகள் மீது உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள் என்பதையும், மகள் - தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் கலக்கல் வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த `விஸ்வாசம்'.

DOWNLOAD

தேனியின் கொடுவிலார்பட்டியில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், கம்பு சுத்தி அதகளம் செய்து நியாயத்தை ரத்தக்களறியுடன் நிலைநாட்டுவது, தூக்குதுரை ஸ்டைல். மும்பை இறக்குமதி டாக்டர் நிரஞ்சனாவுக்கு இது முதலில் பிடிக்காமல் போய், பிறகு பிடித்துப்போக காதல் டு கல்யாணம் ஆகிறது. ஆனால், அடிதடிதான் எல்லாம் என இருக்கும் தூக்குதுரையால், குழந்தைக்கு என்ன ஆகுமோ என நினைத்துப் பிரிந்துவிடுகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான், `சிறுத்தை' சிவாவின் `விஸ்வாசம்'. ரசிகர்களுக்கு அஜித்தின் அறிவுரையுடன் ஆரம்பிக்கிறது, `விஸ்வாசம்'. கிராமத்துக் கதை, வெள்ளை வேட்டி, கூலர்ஸ் இதுதான் அஜித். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் அவ்வளவு எனெர்ஜெட்டிக்காக இருக்கிறார். 

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

வெல்கம் பேக் தல!  இவ்வளவு கலகலப்பான அஜித்தைப் பார்த்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், பார்த்ததும் பிடித்துவிடுகிறது. `இஞ்சாரா, அடேங்கப்பா' மட்டும் அல்லாமல், கிராமத்து வட்டார வழக்கிலேயே படம் முழுக்கப் பேசியிருக்கிறார். அவர் அடிக்கும் ஒவ்வொரு ஒன்லைனர்களுக்கும் அஜித் ரசிகர்கள் அவ்வளவு கொண்டாடுகிறார்கள். `அடிச்சுத் தூக்கு' பாடலுக்கு அப்படியொரு அதிரடியான மாஸ் குத்து குத்தியிருக்கிறார், அஜித். `அட்டகாசம்' படத்து `தீபாவளி தல தீபாவளி' பாடலுக்குப் பின்னர், கெத்தாக இருக்கிறது அவரது நடனம்.
`வீர'த்தில் தம்பி சென்டிமென்ட், `வேதாள'த்தில் தங்கை சென்டிமென்ட், `விவேக'த்தில் மனைவி சென்டிமென்ட், `அடுத்து என்ன... அதேதான்' என்பதுபோல், இதில் மகள் சென்டிமென்ட். ஆனால், இதில் அது வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. `கண்ணான கண்ணே' பாடலில் வரும் மான்டேஜ் அழகு. அதிலும், மகளாக `என்னை அறிந்தால்' படத்தில் வரும் மகள் அனிகாவைத் தேர்வு செய்தது, ஸ்மார்ட் சாய்ஸ். செமயாக கனெக்ட் ஆகிறது. `வீர'த்தில் அஜித் மட்டுமே குடித்த டீயை இதில் எல்லோருமே குடித்துவிட்டார்களா... என யோசிக்கும் அளவுக்கு எல்லோருக்குமே 10 ஆண்டு இடைவெளியில் அவ்வளவு நரை!. 
நிரஞ்சனாவாக வரும் நயன் மட்டும் அப்படியே இருக்கிறார். சேலை, மாடர்ன் டிரெஸ் என இரண்டிலும் அழகாக கலர்ஃபுல்லாக இருக்கிறார், நயன்தாரா. படத்தின் வசனங்களை சிவாவுடன் இணைந்து ஒரு டீமே எழுதியிருக்கிறார்கள். `வாழ்க்கைல ஒரு தடவைகூட அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவைகூட சிரிக்காத ஏழையும் இல்லை', `அஞ்சாவதா நிக்கல; உன் அச்சாக நிக்குது' என ஆரம்பித்து, ஏகத்துக்கும் வசனங்கள். ஆனால், பெரிதாக எதுவும் ஈர்க்கவில்லை. முதுகுல குத்திட்டீங்க டைப் வசனங்கள், கிராமத்து டைப் படம் என்பதாலேயே வலிந்து திணித்து விவசாயி வசனங்கள் வைக்காததற்கும் பாராட்டுகள்.
இமானின் இசையில் `கண்ணான கண்ணே' பாடல் அட்டகாச மெலடி என்றால், `வானே வானே' வழக்கம்போல் எங்கேயோ கேட்டதில் ஏற்கெனவே கேட்ட ரகம். சிவாவின் வரிகளில் வரும் ரைஸ் அப் தீம் அதிரடி மிரட்டல். படத்துக்குத் தேவையான கலரையும், மாஸையும் தருகிறது வெற்றியின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும். முதற்பாதியில் வரும் ஆங்கில ரோபோ சங்கர், யோகிபாபு, தம்பி ராமையா காமெடிகளைக்கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதியில் காமெடி என்கிற பெயரில் விவேக்கும், கோவை சரளாவும் செய்திருப்பதெல்லாம் படத்துக்கு திருஷ்டிப் பொட்டு. 
அதேபோல், முதல் பாதியில் தொடர்ச்சியாக ஒவ்வொரு காட்சிக்கும் பாடல் வருகிறது. சிவா படத்தில் வில்லன்களைவிட அதிகமாக தேவையற்ற பாடல்களும், ஜோக்குகளும் படத்தை நிரப்பிவிடுகின்றன. யோகிபாபுவுக்கே பெரிதும் ஸ்கோப் இல்லாத படத்தில், வில்லன் வேண்டுமே என ஜெகபதிபாபு. அதை நோக்கி நகரும் இரண்டாம் பாதி, இந்த ஓட்டப்பந்தயத்துக்கு அக்கப்போறா... என உஸ் கொட்ட வைக்கிறது.
உங்க ஆசையைத் திணிச்சு உங்க குழந்தையை வளர்க்காதீங்க என்னும் கருத்தைப் பேசுகிறது, `விஸ்வாசம்'. அஜித் - சிவா காம்போவில் இதுவரை வெளியான `வீரம்', `வேதாளம்', `விவேகம்', `விஸ்வாசம்' வரிசையில், `விஸ்வாசம்' வீர லெவல்!

Post a Comment