ஜெயிலர் படத்தை தொடர்ந்து வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஹியூமனாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஜீவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஹீரோயினாக தன்யா ஹோப் நடித்துள்ளார்.
DOWNLOAD
ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை இயக்குநர் கையிலெடுத்து இருந்தாலும் ரசிகர்களை கவரும் விதமாக படம் உருவாகவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
ஹாலிவுட்டிலேயே சூப்பர் ஹீரோ படங்கள் சமீப காலமாக செல்ஃப் எடுக்காமல் உள்ள நிலையில், சத்யராஜை வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனை முயற்சி ரசிகர்களுக்கு தியேட்டரில் சத்ய சோதனையாக மாறியுள்ளது. படத்தை பற்றிய முழு அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க.. வெப்பன் கதை: யூடியூபராகவும் இயற்கை ஆர்வலராகவும் உள்ள வசந்த் ரவி தேனியில் நடக்கும் ஒரு அரிய நிகழ்வு குறித்து அறிந்து கொள்ள அங்கே பயணிக்கிறார்.
அதே போல பிளாக் சொசைட்டி எனும் இயக்கத்தை நடத்தி வரும் வில்லனான ராஜீவ் மேனன் தனது ஆட்களை காலி செய்த நபர் ஒரு சூப்பர் ஹீரோவாகத்தான் இருப்பார் என நினைத்து அவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். சத்யராஜ் எப்படி சூப்பர் ஹியூமனாக மாறினார். வசந்த் ரவிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் கிளைமேக்ஸில் சத்யராஜுக்கு என்ன ஆகிறது என்பது தான் படத்தின் கதை.
பல ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படங்களில் பார்த்த காட்சிகளை அடுக்கி வைத்து ஒரு படமாக உருவாக்கியது போலத்தான் உள்ளது. திடீரென ஹிட்லர் கதையை எல்லாம் உள்ளே சொருகி இயக்குநர் எங்கே எங்கேயோ செல்கிறார். ஏகப்பட்ட கிளை கதைகளை சொல்வதால் ரசிகர்களுக்கு படம் பார்த்த அனுபவம் போல தெரியாமல் ஹாலிவுட் படத்தின் கதை கேட்ட அனுபவம் தான் அதிகம் வருகிறது. சூப்பர் ஹீரோவாக உள்ள சத்யராஜ் தனது குடும்பத்தை ஏன் காப்பாற்றவில்லை? தனது குழந்தையை ஏன் தேடவில்லை? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
சத்யராஜுக்கு ஏகப்பட்ட பில்டப்புகளுடன் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் ஹீரோ பற்றிய பேச்சுக்கள் மட்டுமே பேசப்பட்டு வரும் நிலையில், இடைவேளையில் அதற்கான காட்சியை காட்டும் போது நிச்சயமாகவே அந்த இடம் செம மாஸாக உள்ளது. ஆரம்பத்தில் வசந்த் ரவி இந்த படத்தில் ஹீரோவா? வில்லனா? அல்லது துணை நடிகரா? என்கிற சந்தேகங்கள் கிளம்புவதும் இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு கன்வின்ஸிங்காகவும் உள்ளன. ஜிப்ரான் இசை உள்ளிட்டவை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இடைவேளைக்கு பிறகாவது படம் சூடு பிடிக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு அதன் பின்னரும் ஏமாற்றம் தான். ராஜீவ் மேனன் வில்லத்தனம் எல்லாம் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு இந்த படத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் அதற்கு ஒரு இலக்கணத்தை செட் செய்து விஷுவல் ட்ரீட் கொடுத்தாலே ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். ஆனால், வெப்பன் படத்தில் அதுவும் மிஸ்ஸிங். இயக்குநரின் எண்ணம் பெரிதாக இருந்தாலும், அதை படமாக மாற்றியதில் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
Post a Comment