நாயகன் ஸ்ரீராம் கார்த்தியின் கண்முன்னே, தனது காதலியான க்ரிஷா க்ரூப்பை கடத்தி விடுகிறார்கள். காதலியை கடத்தி விட்டதாக அருகிலுள்ள போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் செல்கிறார் ஸ்ரீராம்.
DOWNLOAD
அங்கு, இன்ஸ்பெக்டராக வரும் யோக்ஜேபி, மிகவும் அலட்சியமாகவும், தகாத வார்த்தைகளிலும் பேசி ஸ்ரீராமை கோபத்துக்குள்ளாக்கிறார். இதனால் யோக்ஜேபியை தாக்கி விடுகிறார் ஸ்ரீராம்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
ஸ்ரீராமை கைது செய்து ஜெயிலில் அடைத்துவிடுகிறார் யோக்ஜேபி. இந்நிலையில், யதேச்சையாக க்ரிஷா குருப் யோக் ஜேப்யின் கையில் சிக்க, அவரை டார்ச்சர் செய்கிறார் .
அதுமட்டுமல்லாமல், வில்லனாக வரும் சுரேஷ்மேனனும் க்ரிஷாவை தேடி அலைகிறார்.
யோக்ஜேபியிடம் இருந்தும், சுரேஷ் மேனனிடம் இருந்தும் தனது காதலியை ஸ்ரீராம் எப்படி காப்பாற்றினார்.? எதற்காக சுரேஷ் மேனன் க்ரிஷா குருப்பை தேடுகிறார்..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
முழுக்க முழுக்க சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டிருப்பதால், படம் மிகுந்த கவனம் ஈர்க்கிறது. படம் முழுக்க முழுக்க காவல்நிலையத்தை சுற்றி நடப்பதால், படம் மேலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
25 நாட்கள் 25 நடிகர் நடிகைகளுடன் பயிற்சி பெற்று 100 டெக்னீஷியன்கள் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளது படக்குழு.
கதை முழுவதும் ஒரே இரவில் நடைபெறுவதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்திருந்தார் இயக்குனர். சிறிய கதை என்றாலும், அதை ரசிக்கும்படியாக கொடுத்திருப்பது இயக்குனரின் திறமை.
என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் போஸ் வெங்கட், தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். படத்தின் வசனங்களை இவரே எழுதி, அதை கவனிக்கவும் வைத்திருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
யோக்ஜேபியின் நடிப்பு கவனிக்க வைத்தது. டப்பிங் அவரே கொடுத்திருந்தால், கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் உயிர் கிடைத்திருக்கும்.
Post a Comment