நவீன்(மணிகண்டன்) மற்றும் வெண்ணிலா(சான்வி மேகனா) இடையே காதல் ஏற்படுகிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்கிறார்கள். இதையடுத்து அவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார்கள் என்பது தானே கதை என்று நினைத்தால் அது தவறு. கிராபிக் டிசைனரான நவீன் வேலையின்போது நகைக்கடை பிரதிநிதியை அறைந்துவிடுகிறார். இதையடுத்து அவருக்கு வேலை போகிறது. பத்தாக்குறைக்கு நவீனின் நண்பர் வேறு அவர்களின் முதலாளியை அறைந்துவிடுகிறார்.
DOWNLOAD
நவீனுக்கு வேலை போக மறுபக்கம் ஐ.ஏ.எஸ். கனவுடன் இருக்கும் வெண்ணிலா கர்ப்பமாகிறார். நவீனின் வங்கிக் கணக்கில் காசு சுத்தமாக இல்லை. இருந்தாலும் வாழ வேண்டுமே, கடன் வாங்கத் துவங்குகிறார் நவீன். முதலில் ரூ. 20 ஆயிரம் கடன் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் அது ரூ. 3 லட்சமாக அதிகரிக்கிறது. அவர் தொட்டது எல்லாம் நஷ்டமாகிறது. ஸ்டேட்டஸ் பார்க்கும் மைத்துனர் ராஜேந்திரன்(குரு சோமசுந்தரம்)முன்பு வாழ்ந்து காட்ட நினைத்தாலும் எல்லாம் தவறாகவே நடக்கிறது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
தலைமை என்ஜினியராக இருக்கும் ராஜேந்திரனுக்கு ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். அவரும், நவீனும் பேசினாலே ஒரு பக்கம் டென்ஷன் மறுபக்கம் சிரிப்பாக இருக்கும். மணிகண்டன், குரு சோமசுந்தரம் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பக்கபலம்.
நவீனின் வேலை தேடும் படலம் சுவாரஸ்யமாக இல்லை. படத்தில் லாஜிக்கை எதிர்பார்க்கக் கூடாது. ஒரு திறமையான கிராபிக் டிசைனருக்கு வேலை போனால் இன்னொரு வேலை கிடைப்பது இவ்வளவு கஷ்டமா என வியக்க வைக்கிறார்கள்.
நவீன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மணிகண்டன். ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்த மைத்துனராக அசத்தியிருக்கிறார் குரு சோமசுந்தரம். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் சான்வி மேகனா. மணிகண்டனின் பெற்றோராக வரும் சுந்தர்ராஜன், குடசநாடு கனகம் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்
Post a Comment