Home » , , » Thani Oruvan Movie Review

Thani Oruvan Movie Review

தெளிவான குறிக்கோளுடன் பொறுப்பேற்ற ஐபிஎஸ் அதிகாரி, நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு காரணமான ஒருவனை பிடித்து குற்றங்களை அடியோடு களையறுக்க வேண்டும் என்று தனி ஒருவனை நோக்கி பயணிக்கும் கதையே "தனி ஒருவன்".

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

சமீபத்தில் வந்த படங்களிலேயே சிறந்த திரைக்கதையுடன் அமைந்த படம் தனி ஒருவன் என்றே சொல்லலாம். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்", அண்ணன் - தம்பி கூட்டணியில் இதுவரை வெளியான 6 படங்களும் வெற்றி பெற்றன. இருப்பினும் ராஜாவின் சொந்த கற்பனையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிட்டுகள் எகிறியுள்ளன. படத்திற்கு ஏகப்பட்ட நல்ல விமர்சனங்கள், கருத்துக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது.

DOWNLOAD

மித்ரன் (ஜெயம் ரவி) ஐபிஎஸ் அதிகாரியாக பொறுபேற்கும் முன்பே ஊரில் நடக்கும் குற்றங்களுக்கு பின்னணி யார்? என்று தொடங்கும் அவரது தேடுதல் வேட்டை முதல், குற்றவாளியை வேரறுக்கும் காட்சி வரை விறுவிறுப்பு குறையாதது படத்தின் பலம்.
இப்படத்தை தினமும் நாம் வாசிக்கும் செய்திதாள்களில் இருந்து தனி ஒருவனுக்கான கதையை தேர்ந்தெடுத்து சிறந்த திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு அறிமுகம் கொடுக்காமல் வில்லனை அறிமுகப்படுத்தியது உச்சக்கட்ட சிறப்பு. ரசிகர்களுக்கு படத்தின் க்ளைமேக்ஸ் வரை ட்விஸ்ட் வைத்து கட்சிதமாக காய் நகர்த்தியுள்ளார் மோகன் ராஜா.
அறிவுப்பூர்வமாக செயல் படும் ஹீரோவை மிஞ்சும் விஞ்ஞானி வில்லன். ரொமேண்டிக் நாயகனான அரவிந்த்சாமியை க்ளாசிக் வில்லனாக களமிறக்கியது சிறப்பு. மருத்துவ மாஃபியா செய்யும் தரமான வில்லனும் அறிவால் அவனை நெருங்கும் நாயகனும் கதைக்கு இரு பெரிய தூண்கள்.
மித்ரன் ஐபிஎஸ் அதிகாரியாக வரும் ஜெயம் ரவி அதற்கேற்ற கம்பீரத்துடன் காட்சிகளில் கம்பீர நடை போடுகிறார். ஆக்ஷன் ஹீரோவாக தனி ஒரு பரிமாணத்தை அளித்துள்ளார் ஜெயம் ரவி. ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள், நண்பர்களுடன் என அனைத்திலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
வில்லன் சித்தார்த் அபிமன்யுவான அரவிந்த்சாமியின் உடல் பாவனைகள் தரமான வில்லனுக்குறியது. அவரது வசனங்கள் கதாப்பாத்திரத்திற்கும், கதைக்கும் மேலும் பலம் சேர்த்துள்ளது.
நாயகியை பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். பெண்களை கவர்ச்சி பொம்மையாகவும், காதல் கன்னியாகவும் இயக்குனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், நயன்தாராவை வில்லன்-ஹீரோவுக்கு சமமாக உபயோகித்துள்ளார் இயக்குனர். படம் முழுவதும் நயன்தாரா வரவில்லை என்பது ஏமாற்றம் அளித்தாலும் அவர் வரும் காட்சிகளில் ரசிகர்களின் மனதில் நின்று செல்கிறார். நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக வளம் வருவது ரசிக்க வைத்துள்ளது. காதல் காட்சிகளில் ஜெயம் ரவி-நயன்தாரா இடையேயான பார்வைகள் அசத்தல்.
கோலிவுட் படங்களில் கமர்ஷியல் நோக்கத்தில் கண்டிப்பாக 5 பாடல்கள் இடம் பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு மத்தியில் பாடல்களை சுருக்கி தேவையான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
ஐபிஎஸ் பயிற்சியில் ஜெயம் ரவியுடன் கைகோர்த்த கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண் ஆகியோர் கதாப்பாத்திரங்களில் உயர்ந்துள்ளனர். ஹீரோவின் நண்பனை கொள்ள வரும் வம்சி கிருஷ்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார்.
தனி ஒருவன் போன்ற படங்களில் தம்பி ராமையாவின் கதாப்பாத்திரம் மட்டும் சற்று விலகியே உள்ளது. அவரது நடிப்பிற்கு இணையான கதாப்பாத்திரம் அமையவில்லை என்றே கூற வேண்டும்.


தனி ஒருவன் படத்தின் தொழில்நுட்பங்கள் சிறந்த பலம். படத்தின் திரைக்கதை அமைப்பு இறுதி வரை ரசிகர்களின் கண்களை அயர வைக்கவில்லை. முதல் பாதியில் இருந்த அதே விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் தொடர்வது ரசிகர்களிடம் படத்திற்கான வலிமையை உணர்த்தியுள்ளது.
தனி ஒருவனின் வசனங்கள் படத்தின் சிறப்பம்சம். இயக்குனர் மோகன் ராஜா மற்றும் எழுத்தாளர் சுபாவின் பேனா முனையில் தோன்றிய வசனங்கள் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
ராம்ஜியின் ஒளிப்பதிவு படம் முழுவதும் பயணிப்பது ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தளித்துள்ளது. படத்தில் உபயோகித்திருந்த நிறம் அதன் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது. ஒரே நிறத்தை காட்சிகளுக்கு ஏற்ப பயன்படுத்தியது படத்தை சர்வதேச அளவிற்கு ஈடாக அமைந்துள்ளது.
முதல் படமானாலும் கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பு மிக நுணுக்கமாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. என்ன படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளதால் 2 மணிநேரம் 32 நிமிடம் என்பது சற்று நீளமே! படத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சில அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் வரவேற்கத்தக்கது.
"தனி ஒருவன்" படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் புதுவித ஆக்ஷன் த்ரில்லர் என்ற வகையில் இடம்பெற்றுள்ளது. ஆக்ஷனுடன் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து சினிமா இயக்குனர்களுக்கு ஒரு புதிய வழியை வகுத்துள்ளது இப்படம்.
Share this article :

Post a Comment