Home » , » Kadhal Enbathu Podhu Udamai Movie Review

Kadhal Enbathu Podhu Udamai Movie Review

தன் மகள் சாம்(லிஜோமோல் ஜோஸ்) காதலிக்கும் நபரை பார்க்க ஆவலாக இருக்கிறார் லக்ஷ்மி(ரோகிணி). மகள் தன் துணையை அழைத்து வரும்போது அவரின் அப்பாவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார் லக்ஷ்மி. அதனால் பிரிந்து சென்ற முன்னாள் கணவரான தேவராஜை(வினீத்) வீட்டிற்கு வரச் சொல்கிறார். சாம் சிறுமியாக இருந்தபோதே அப்பாவும், அம்மாவும் பிரிந்துவிட்டார்கள்.

DOWNLOAD HD SOON

சாமின் காதலரை காண லக்ஷ்மியும், தேவராஜும் காத்திருக்கும் நேரத்தில் நந்தினி(அனுஷா பிரபு) என்பவரை அழைத்து வருகிறார் சாமின் நண்பர் ரவீந்திரா(கலேஷ் ராமானந்த்). அதை பார்த்த லக்ஷ்மியும், தேவராஜும் தங்கள் மகள் ரவீந்திராவை தான் காதலிக்கிறார் போன்று என நினைக்கிறார்கள். ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர் ரவீந்திரா இல்லை நந்தினி என சாம் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். உடனே இங்கிருந்து போ என நந்தினியை அனுப்பிவிடுகிறார் லக்ஷ்மி. அப்பொழுது சாம், நந்தினி இடையே பிரேக்கப் ஏற்படுகிறது.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 
https://t.me/moviesdahdd

இந்நிலையில் சாம், நந்தினி இடையே எப்படி காதல் ஏற்பட்டது என்பதை பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். நந்தினி விஷயத்தில் அம்மாவை மட்டும் அல்ல இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது திடீரென்று வந்து உன் பிரச்சனையை தீர்க்க முடியும் என சொல்லும் அப்பாவையும் சேர்த்து சமாளிக்க வேண்டி இருக்கிறது.

படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சாமாக அற்புதமாக நடித்திருக்கிறார் லிஜோமோல் ஜோஸ். லக்ஷ்மியாகவே வாழ்ந்திருக்கிறார் ரோகிணி. தேவராஜாக பொருத்தமாக இருக்கிறார் வினீத். நந்தினி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் அனுஷா பிரபு. கலேஷின் காமெடி கை கொடுத்திருக்கிறது.

காதல் என்பது பொதுவுடைமை படம் கவரும்படி இருக்கிறது.
Share this article :

Post a Comment