Home » , » Konjam Kadhal Konjam Modhal Movie Review

Konjam Kadhal Konjam Modhal Movie Review

1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் கே ரங்கராஜ் இதனை வருடம் கழித்து இந்த 2k யுகத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது. 

DOWNLOAD HD SOON

அதுவே இந்தப் படத்தை பார்க்கத் தூண்டும் காரணியாக அமைய படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். 

Enjoy HD Movies
Join Telegram Channel 
https://t.me/moviesdahdd

நாயகன் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரத் தொழிலதிபர் அமித்திடம் வேலை பார்க்கிறார். என்ன வேலை என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் – அமித்தின் காரை அவரே ஓட்டுகிறார். அவரது மேனேஜராகவும் இருக்கிறார். அவரது குதிரைகளுக்கு பயிற்சியாளராகவும் இருக்கிறார். கோடீஸ்வரருக்கு வலது கையாகவே வாழ்ந்து போர் அடக்கும் அவர், ஒரு கோடீஸ்வரப் பெண் கிடைத்தால் அவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் கோடீஸ்வரியாக அறிமுகம் ஆகிறார் புஜிதா பொன்னாடா. அவர் தொழிலதிபர் அமித்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஒரு சின்ன ஆள் மாறாட்டத்தில் ஸ்ரீகாந்தைத் தொழிலதிபராக நினைத்து அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். 

ஸ்ரீகாந்தும் தான் கோடிஸ்வரன் இல்லை என்கிற உண்மையை மறைத்து எப்படியாவது கோடீஸ்வரி புஜிதாவைத் திருமணம் செய்து கொண்டால் போதும் என்று கோடீஸ்வரரைப் போலவே நடிக்கிறார். 

இடைவேளைக்கு சற்று முன்புதான் தெரிகிறது புஜிதாவும் கோடீஸ்வரி இல்லை என்பது. முட்டிக் கொள்ளும் இரண்டு பேரும் பிரிய, இருவருக்கும் வேறு வேறு காதல்கள் பிறக்க… மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை. என்ன ஆகியிருக்கும் என்று கண்டுபிடிக்க டிடெக்டிவ் எல்லாம் தேவையில்லை. 

அப்டேட் எல்லாம் ஆகிக்கொள்ள விரும்பாத நாயகன் ஸ்ரீகாந்த், ஆக்டிவாக இருந்தால் மட்டும் போதும் என்று முடிவு எடுத்து வருகிற எல்லா படங்களையும் ஒத்துக் கொண்டிருக்கிறார். எல்லா விஷயங்களிலும் ரோஜா கூட்டத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறார் என்பது அவருக்கு பிளஸ்- ஆ மைனஸ்- ஆ தெரியவில்லை.

திருமலை நாயக்கர் காலத்து சிலை போல் திண்ணென்று இருக்கிறார் புஜிதா. கோடீஸ்வரி வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருக்கிறார். ஆனால் ஒரு ஏழை என்பதை நம்புவதற்கு இல்லை.

அவர்களது பின் பாதிக் காதலர்களாக வரும் பரதனும், நிமி இமானுவேலும் கூட அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். அவர்களது ‘அசைன்மென்டு ‘ம் பொருத்தமாக இருக்கிறது.

கோடீஸ்வரராக வரும் அமித்துக்கு இரண்டு மூன்று காட்சிகளைத் தவிர வேறு வேலை இல்லை. கதைப்படி இடைவேளையுடன் ஸ்ரீகாந்தை வேலையில் இருந்து தூக்கி விடுகிறார் அமித். 

ஆனால் இயக்குனரோ அதற்குப் பின் அமித்துக்கு என்ன வேலை இருக்கிறது என்று படத்தில் இருந்தே அவரைத் தூக்கி விடுகிறார்.

இவர்களுடன் பார்கவ் , நம்பிராஜன், நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, என்று ஒரு காமெடி பட்டாளத்துடன் கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு என்று மூத்த தலைமுறையினரும் தலையைக் காட்டி இருக்கிறார்கள்.

வழக்கமாக கே. ரங்கராஜ் படங்களில் ஒளிப்பதிவும், இசையும் அற்புதமாக இருக்கும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் தாமோதரன், அவரைக் காப்பாற்றி இருக்கிறார். ஆர்.கே.சுந்தர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்.

கிளைமாக்சுக்கு முன்னதாக ஒரு விமானம் கிடைக்க அதை ஓட்டத் தெரியாத ஸ்ரீகாந்த் எடுத்துக்கொண்டு புஜிதாவுடன் நகரின் மேலே பறக்கிறார் என்பதே ஓவர் என்று இருக்க, அந்த விமானம் சரியாக கல்யாண சத்திரத்தில் தரை இறங்கி மணமேடையருகே வந்து நிற்கிறது என்பதெல்லாம்… ஹி…ஹி…ஹி..!
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் – சாமானியனின் சாய்ஸ்..!
Share this article :

Post a Comment