Home » , » Officer On Duty Movie Review

Officer On Duty Movie Review

படம் தொடங்கும்போதே பெங்களூருவில் 8 மாதத்திற்கு முன் நடந்த கதையாக நகர்கிறது. அப்போது ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொள்கிறார். பின்னர் கதை Presentக்கு தொடர்கிறது. இதில், ஒரு அசம்பாவிதம் போலீஸ் அதிகாரியான ஹரிசங்கரைப் (குஞ்சாக்கோ போபன்) பெருமளவில் பாதிக்கிறது. அதுவும் மனரீதியான பாதிப்பை சந்திக்கிறார். அதே போன்ற நிகழ்வை நேரில் காண்கிறபோது அவர் கடுமையான உளைச்சலை எதிர்கொள்கிறார். 

DOWNLOAD

இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். போலி நகை: சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஹரிசங்கர் பணியில் சேர்கிறார். அப்போது, டெபுடி சூப்பரிண்டண்ட் ஆக இருந்த அவர் இன்ஸ்பெக்டர் ஆக பதவி இறக்கம் செய்யப்படுகிறார். மீண்டும் பணியில் சேர்ந்த முதல் நாளே செயின் ஸ்னாட்சிங் கேஸில் சிக்கிய ஒரு பெண்ணை அவர் தாக்குகிறார். அதன் தொடர்ச்சியாக, போலி நகையை அடகு வைத்ததாக ஒரு நபரை போலீசார் அவரிடம் அழைத்து வருகின்றனர். 

Enjoy HD Movies
Join Telegram Channel 
https://t.me/moviesdahdd

போலி நகையை அடகு வைத்தவர் பெயர் சந்திரபாபு (ஜகதீஷ்). அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனராக இருப்பதாகவும், இந்த செயினை நகைக்கடையில் தனது மகளுக்குப் பிறந்தநாள் பரிசாக வாங்கியதாக தெரிவிக்கிறார். பின்னர், ஹரிசங்கர் சந்திரபாபுவின் மகளை நேரில் சந்திக்கிறார். பார்த்த முதல் நொடியிலேயே, ஒரிஜினல் நகைக்குப் பதிலாக டூப்ளிகேட்டை மாற்றி வைத்தது அவர்தான் என்று கண்டுபிடித்து விடுகிறார்.
ந்திரபாபு மகள் பொய் சொல்வதை தெரிந்துகொண்ட ஹரிசங்கர் உண்மையை சொல் நகை எங்க என்று கேட்கும்போது, மேலும் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது. அப்போது, அந்த பெண் நடந்ததை கூறுகிறார். தன்னிடம் ஒரு ஆண் நெருங்கிப் பழகியதாகவும், அவர்தான் அந்த நகையை எடுத்துச் சென்றிருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கிறார். அடுத்த நாள் விசாரணைக்கு அழைத்த போது சந்திரபாபு தனது மகளை அழைத்து வர மறுக்கிறார்.
விசாரணை நடந்த அடுத்த நாளே சந்திரபாபுவின் மகள் வீட்டில் தற்கொலை செய்துகொள்கிறார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ஹரிசங்கர், நேராக சந்திரபாபுவின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது, இன்னொரு பெண் இதே போன்று தற்கொலை செய்துகொண்ட காட்சிகள் ஹரிசங்கர் மனதில் நிழலாடுகின்றன. அப்பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு தான் அழுதது நினைவுக்கு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு வாங்கிய தங்கச்சங்கிலியை யாராவது நகைக்கடைகளில் அடகு வைத்திருக்கிறார்களா என்று கண்டறியத் தொடங்குகின்றனர் போலீசார். விசாரணையில், ஒரு அடகுக்கடையில் அது இருப்பது தெரிய வருகிறது. அதனோடு இன்னும் இரண்டு சங்கிலிகள் இருக்கின்றன. அவற்றை வாங்கியது யார்? அந்த குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர்? அதனை அறியும்போது, அந்த தங்கசங்கிலியோடு சம்பந்தப்பட்ட சிலர் மரணித்திருப்பதைக் கண்டறிகிறார் ஹரிசங்கர். 
இளம்பெண்களைக் குறிவைத்து மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? ஹரிசங்கருக்கு அக்கும்பலைச் சேர்ந்தவர்களை முன்னரே தெரியுமா? என பரபரவென்று நகரும் காட்சிகள் வழியே இரண்டாம் பாதியில் ஆஃபிசர் ஆன் ட்யூட்டி அடி பொலி சாரே என்ற உச்சு கொட்ட வைக்கிறது. திரையில் நுனி சீட்டில் அமர்ந்து விறுவிறுப்பான படத்தை காணும் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க.
வில்லன் கும்பலை கொடூரமாக சித்தரித்துவிட்டு வேறொரு பக்கம் திரைக்கதை திரும்பும்போது, இன்னும் எத்தனை ரணங்கள் காத்திருக்கிறதோ என்று ரசிகர்களின் மனம் பதைபதைக்கும். மலையாளத்தில் சொல்லனும்னா வெல் பிளே சாரே. ஹீரோயிசம் காட்டும் காட்சிகளில் மிக எதார்த்தமாக பிரதிபலிக்கிறது. இதுபோன்ற த்ரில்லர் படங்களை பார்வையாளர்களை குழப்பாமல் மிக கட்சிதமாக படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ காட்சிப்படுத்தியுள்ளார். ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மிளிர்கிறது. மலையாள படத்தில மீண்டும் ஒரு த்ரில்லர் வரவு மேலும் மெருக்கேற்றி பரபரப்பை தந்துள்ளது.
Share this article :

Post a Comment